
மேல்மாகாணத்தில் தேவைக்கு ஏற்றவாறு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் கையிருப்பில் இருப்பதாக அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல்மாகாணத்தில் உள்ள சிறிய அளவிலான கடைகளில் கூட தமது தேவைக்கு ஏற்ப முட்டைகளை விநியோகிக்கக் கூடிய வகையில் முட்டைகள் கையிருப்பில் உள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனதின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
அத்தோடு, பேக்கரி உரிமையாளர்களும் தேவைக்கேற்ப முட்டை இருப்புக்களை வழங்க முடியும், ஆனால் அவர்கள் முட்டை இருப்புகளை ஆர்டர் செய்வதில்லை என்று அரச வர்த்தக பல்வேறு சட்டரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர மேலும் தெரிவித்தார்.