
ஒன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கான 3,265 விண்ணப்பங்கள் குறித்த அமைப்பின் ஊடாக அனுப்பப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த 15 ஆம் திகதி முதல் கடவுச்சீட்டினைப் பெற ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், ஆன்லைன் அமைப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு திணைக்களத்தின் எண் 1962 மூலம் தகவல் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.