
இலங்கைக்கான 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வரவு செலவுத்திட்டம் மற்றும் நலன்புரி உதவிகளை வழங்குவதற்கு உலக வங்கி அங்கீகாரம் வழங்க உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி தளம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாக சபைக் கூட்டத்தில் இந்த உதவித் தொகைக்கு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாக செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த மார்ச் மாதம், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கிட்டத்தட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் நிவாரணமாக வழங்கியதுடன், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை கூடுதல் நிதியை இலங்கை பெற எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.