
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்ற போதிலும், அது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கையில் உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது மிகவும் உணர்ச்சிகரமான விடயம் என்பதால், அரசாங்கம் இவ்விடயத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இலங்கையின் வங்கி மற்றும் நிதி முறைமையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் பதில் நிதியமைச்சர் தெரிவித்தார்.
மேலும், ஸ்திரமான நாட்டை நோக்கி – அனைத்தும் ஒரே வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பின் அளவு தற்போது 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது எனவும் எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள் மேலும் குறையும் என எதிர்பார்க்கலாம் எனஉம் பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறித்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.