
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்கு முன்னர் இலங்கையின் வங்கி முறைமையில் உள்ள முறைகேடான கடன்களை மீளப் பெறுவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாராளுமன்றத்தில் நேற்று விவாதிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த காலங்களில் மத்திய வங்கி கொள்கை வட்டி விகிதங்களை குறைத்த போதிலும் அதன் நன்மைகள் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை என அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.