
கொஸ்கொட, இத்தருவா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்படி, 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துக்கத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இன்று காலை கொட்டாவ தர்மபால வித்தியாலயத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் காயமடைந்த 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.