
இந்த நாட்டில் ஊடகவியலாளர்களை ஒடுக்கும் தேவை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இல்லை என ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்படி, ஒலிபரப்பு அதிகார சபை சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஊடக ஒழுங்குமுறைக் கொள்கைகளை உருவாக்குவது வெகுஜன ஊடகத்துறைக்கே வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.