
வடமேற்கு சீனாவின் யின்சுவான் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, பார்பிக்யூ உணவகத்தின் செயல்பாட்டின் போது திரவ பெட்ரோலிய வாயு கசிவு காரணமாக வெடிப்பு ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அத்தோடு,வெடிப்பில் காயமடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
மேலும், அவர்களில் தீக்காயம் அடைந்தவர்களும், வெடித்து சிதறிய கண்ணாடியால் காயம் அடைந்தவர்களும் அடங்குவதாகவும் உணவகத்தில் இருந்து புகை வெளியேறுவதாகவும், ஏராளமான தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் சீனா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.