
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவு முடிவடையும் திகதி எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்வதற்கான காலக்கெடு கடந்த 16 ஆம் திகதியுடன் முடிவடைந்தத நிலையில் தேர்தல் ஆணைக்குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சில பிரதேசங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தேர்தலுக்காக மீண்டும் திறைசேரியில் பணம் கோரவுள்ளதாகவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.