
புதிய வரிகளை அறவிடுவதற்கு பதிலாக வரி தளத்தை விஸ்தரிப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டிலுள்ள அனைவரிடமும் வரி அறவிடுவதற்கு பதிலாக திறமை உள்ளவர்களிடம் மட்டுமே வரி விதிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 14 வகைகளின் கீழ் புதிய வரி செலுத்துவோரைப் பதிவு செய்யும் முறை வெற்றியடையும் பட்சத்தில், 2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் மறைமுக வரிகள் மற்றும் நேரடி வரிகளின் விகிதத்தை 60% – 40% ஆகக் குறைக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.