
குறைந்த வருமானம் பெறுவோருக்கு மானியம் வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட அஸ்வசும வேலைத்திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, குறித்த வேலைத்திட்டத்தில் உள்ளடங்கியவர்களில் அரச அதிகாரிகளும் செல்வந்தர்களும் உள்ளடங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.