
2010ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் உதுல் பிரேமரத்ன உள்ளிட்ட 22 பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதிபதி தனது தீர்ப்பை அறிவித்ததுடன், பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் குறித்த விசாரணையில் முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் உதுல் பிரேமரத்ன உட்பட 22 பிரதிவாதிகளுக்கு எதிராக பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.