
அரச காணிகளை அடையளப்படுத்தும் புதிய திட்டம் அடுத்த பதினைந்து நாட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக காணி சீர்திருத்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, பல்வேறு நிறுவனங்களால் அரச காணிகளை அப்புறப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முறையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைய இது அமுல்படுத்தப்படுவதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார் .
இதுவரை அரச காணிகளை அடையளப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நில அளவைப் பணிகளை நிறைவு செய்த தமது அமைப்பிற்குச் சொந்தமான 57,000 காணிகளுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட உள்ளதாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.