
படாபொல, படாதுவ பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் கூரிய ஆயுதம் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதன்படி, உயிரிழந்தவர் கொபெயிதுடுவ பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், அவர் மூன்று நபர்களுடன் உணவகத்தில் தங்கியிருந்தபோது மற்றொரு குழுவுடன் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில் குறித்த சம்பவம் இடம்பெறுள்ளதுடன் இதுதொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.