
ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதன்படி, களுவலகொட பிரதேசத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று குற்றச் செயல்களுக்காகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபரை கைது செய்வதற்காக சென்றதுடன், அப்போது நபர் ஒருவர் அதிகாரிகளை கத்தியால் தாக்க முயற்சித்த நிலையில் குறித்த நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு தற்போது எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது கடமை துப்பாக்கியால் குறித்த நபரின் காலில் சுட்டதாகவும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் 26 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, சந்தேக நபர் எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் ஏனைய சந்தேக நபர்களை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.