
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் உரையாடல்களின் மூலம் இழந்த சர்வதேச உறவுகளை மீளக் கட்டியெழுப்ப முடிந்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்தோடு, நாடு எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து மீளக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட உலக நாடுகளின் பூரண ஆதரவு இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடனுதவிக்கான மீளாய்வு செப்டெம்பர் மாதத்தின் நடுப்பகுதிக்குள் மேற்கொள்ளப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உடன்படிக்கைகள் மற்றும் அது தொடர்பான விடயங்கள் தொடர்பில் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.