
அஸ்வசும சமூக நலத்திட்டத்தின் கீழ் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்காத குடும்பங்களுக்கு ஜூலை மாதம் முதல் தவணை வழங்கப்படும் என ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.
இதன்படி, அநுராதபுரத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், அஸ்வசும சமூக நலத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் இறுதிப் பட்டியல் தற்போது தெரியவிக்கப்படவில்லை எனவும் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வழங்கப்பட்ட 10 நாட்களுக்குப் பிறகு இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குடும்பப் பிரிவினர் மேல்முறையீடு செய்தால், நலப் பலன்கள் வாரியமும் பரிசீலிக்கத் தயாராக உள்ளதாகவும் இதுதவிர பெறப்பட்ட மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலிக்க மாவட்ட செயலாளர்கள் மூலம் உரிய குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு 10 நாட்கள் முடிவில் மிக குறுகிய காலத்தில் இறுதி ஆவணம் வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்,
அத்தோடு, சம்பந்தப்பட்ட நபர்கள் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்களுடனோ அல்லது அரசியல் சித்தாந்தங்களுடனோ இணைந்து செயற்படக் கூடாது என்றும் பதில் நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.