
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் வழங்குமாறு திறைசேரியிடம் மீண்டும் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டின் பொருளாதாரம் ஓரளவுக்கு நல்ல நிலையில் உள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலர் தெரிவித்து வரும் கருத்துக்களை கருத்திற்கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பணம் கொடுத்தால் அரசு அறிவிக்கும் எந்த தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணைக்குழு தயாராக இருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஜூலை 10 ஆம் திகதி வரை இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.