
இந்த வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 40 வீதத்தால் குறைந்துள்ளதாக வர்த்தக வலய தொழிலாளர்களின் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ளதாகவும் இதன் காரணமாக ஆடைத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தக வலய தொழிலாளர்களின் தேசிய மத்திய நிலையத்தின் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு,நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஆடைத் தொழிலை புத்துயிர் பெறுவதற்கு தேவையான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் வர்த்தக வலய தொழிலாளர் தேசிய மத்திய நிலையத்தின் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.