
ரஷ்யாவில் வாழும் இலங்கையர்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அவசர அறிக்கை ஒன்றை வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.
இதன்படி, ரஷ்யாவில் சுமார் 1500 இலங்கையர்கள் உள்ளதாகவும் அவர்களில் சுமார் 1000 பேர் கல்வி நோக்கத்திற்காக அங்கு சென்ற மாணவர்கள் எனவும் எஞ்சியவர்கள் அந்நாட்டில் வேலை செய்கிறார்கள், அவர்களில் சிலர் அந்த நாட்டில் வசிப்பவர்கள் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு இதுவரை எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஷ்யாவிற்கு எதிராக கூலிப்படையான வாக்னர் ஆயுதக் குழுவானது கிளர்ச்சியைத் தொடங்கியுள்ள நேரத்தில் ரஷ்யாவில் வாழும் இலங்கையர்கள் மீது வெளிவிவகார அமைச்சின் கவனம் திரும்பியுள்ளது.