
வரியின்றி இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 800 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
மேலும், சீனா நாட்டினைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.