
பேரூந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு போதைப்பொருள் வழங்கி அவர்களின் தங்கத்தை திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரிடமிருந்து 04 மாத்திரைகள், தங்க நெக்லஸ், 03 தங்க மோதிரங்கள் மற்றும் ஒரு தங்க வளையலுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், ராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.