
குறைந்த வருமானம் பெறுவோருக்கு மானியம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் ஆரம்பித்துள்ள அஸ்வசும நலன்புரி வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த திட்டத்தை நிறுத்தினால் எந்த தரப்பினருக்கும் எந்த பலனும் ஏற்படாது எனவே எந்தவொரு தரப்பினருக்கும் அநீதி ஏற்படாத வகையில் அஸ்வசும நலன்புரி வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பயனாளிகளை தெரிவு செய்வதில் பரிசீலிக்கப்படும் காரணிகளின் அடிப்படையில் இந்த வருடம் தகுதியானவர்கள் அடுத்த வருடம் மாறலாம் எனவும் மானிய திட்டங்களின் கீழ் பயனடையும் மக்களை பொருளாதார ரீதியில் பலமான பிரஜைகளாக மாற்றுவதற்கு தேவையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சமூக வலுவூட்டல் அமைச்சின் பொறுப்பாகும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.