
செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போது ஒரு கோடியே எழுபத்தெட்டு இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் சந்தேகநபராக ஆஜராகுமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இரத்து செய்துள்ளது.
இதன்படி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் சமர்ப்பித்த ரிட் மனு மீதான தீர்ப்பை வழங்கும் போதே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் பிரதேசத்தில் இடம்பெற்ற கோட்டா கோ கிராமப் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகநபராக தேஷ்பந்து தென்னகோனை பெயரிடுமாறு சட்டமா அதிபர் கடிதம் ஒன்றை விடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக நெஎமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.