
ஹங்வெல்லவில் இருந்து எலமலாவல நோக்கி பயணித்த பஸ் ஒன்று நெலுவத்துடுவ பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதன்படி, ஹோமாகம லஇலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாகவும் விபத்து நடைபெற்றபோது பேருந்தில் சாரதியும் மற்றும் கண்டக்டர் மட்டுமே இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், காயமடைந்த இருவரும் கொஸ்கம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.