
மானியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வறிய குடும்பங்கள் தெரிவு செய்வதற்கான சிறந்த வழி, அவர்களின் மாதாந்த மின்சாரக் கட்டணத்தின் அடிப்படையில் ஏழை மக்களைக் கண்டறிவதே சிறந்த வழி என சமகி ஜனபலவேக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்படி, காப்புறுதி நன்மை திட்டத்திற்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.