
குருவிட்ட, புஸ்ஸல்லாவில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.
இதன்படி, ரக்வானாவில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்தில் காயமடைந்த பத்து பேரும் இரத்தினபுரி, அவிசாவளை மற்றும் எஹெலியகொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.