
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் பாதுகாப்பான முறைகளின்படி மேற்கொள்ளப்பட்டால், நாட்டின் வங்கி அமைப்புக்கோ, நாட்டு மக்களின் வைப்புத்தொகைக்கோ எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்று உண்மை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சிலர் அச்சப்படும் நடவடிக்கைகளை குறைக்கும் நோக்கில் அரசாங்கம் நீண்ட வங்கி விடுமுறையை வழங்கியுள்ளதாக அதன் பணிப்பாளர் கலாநிதி நிஷான் டி மெல் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, உள்ளுர் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் அனைத்து மக்களுக்கும் பொதுவான அர்ப்பணிப்பை மேற்கொள்ளும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் கலாநிதி நிஷான் தெரிவித்தார்.
உள்ளூர் கடனை மறுசீரமைப்பதில் முறையான வழிமுறைகளைப் பின்பற்றினால், வங்கி அமைப்பில் வைப்புத்தொகை தொடர்பான பாதுகாப்பில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றுஉண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதிவ நிஷான் டி மெல் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.