
திட்டமிட்டபடி மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி சபையை நடத்தாததன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளரினாலும் முன்வைக்கப்பட்ட ஆரம்ப ஆட்சேபனையினை உச்ச நீதிமன்றத்ம் நிராகரித்துள்ளது.
இதன்படி, புவனேகா அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகிய ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று இந்தத் தீர்மானத்தை அறிவித்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி மற்றும் பாஃப்ரல் அமைப்பு ஆகிய இரண்டு அடிப்படை உரிமை மனுக்களும் முன்வைக்கப்பட்டன. தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் இந்த மனுவை முன்வைத்துள்ளனர்.
குறித்த மனு தற்போது உச்சநீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது.