
முஸ்லிம்களின் ஹஜ்ஜு பெருநாளினை முன்னிட்டு ஜூன் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, ஹஜ்ஜு பெருநாள் ஜூன் 29ஆம்திகதி வியாழக்கிழமை இலங்கையில் கொண்டாடப்படுவதினை முன்னிட்டு .விசேட பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜுலை 8 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்பட வேண்டுமென கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.