
எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஓய்வுபெறவுள்ள விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
இதற்கமைய, குறித்த வைத்தியர்கள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கும் வரை, அவர்கள் ஓய்வு பெறும் திகதி எதுவாக இருந்தாலும், அவர்கள் தமது கடமைகளை மேற்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறித்த வைத்தியர்களின் ஓய்வு குறித்து சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமது ஓய்வு குறித்து விசேட வைத்தியர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி 60 வயதில் மருத்துவ நிபுணர்களுக்கு ஓய்வு வழங்க அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்கக் கோரி 176 மருத்துவ நிபுணர்கள் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று பரிசீலித்தது.
மேலும், மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன நீதிமன்றதிற்கு வருகைதந்ததோடு விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக அதிகரிக்க சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தமக்கு அறிவித்ததாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின்புள்ளே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.