
இன்று பிற்பகல் விசேட அமைச்சரவைக் கூட்டமும் ஆளும் கட்சி உறுப்பினர்களின் குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் 03.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன் பின்னர் மாலை 05.00 மணிக்கு அரசாங்கக் கட்சி எம்.பி.க்கள் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.