
வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டமுரி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இதன்படி, குறித்த 14 வயது சிறுவன் தனது சகோதரர் மற்றும் உறவினர்கள் இருவருடன் விலங்குகளை வேட்டையாடிக்கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டதில் 14 வயது சிறுவன் படுகாயம் அடைந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்தோடு, சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறுவனின் மூத்த சகோதரர் மற்றும் வேட்டையாடச் சென்ற இரு சகோதரிகளின் கணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேகநபர்கள் கொண்டு சென்ற துப்பாக்கி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.