
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜப்பானிற்கு புறப்பட்ட விமானம் 02 மணித்தியமும் 25 நிமிட பயணத்தின் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தொழில்நுட்ப கோளாறு காரணமாகும். எயார்பஸ் விமானம் நேற்று இரவு 08:20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜப்பானின் நரிட்டா நோக்கி புறப்பட்டு சென்ற நிலையில் .திட்டமிட்டபடி விமானத்தின் சக்கர அமைப்பு வழுக்குவதை தனது கணினியில் காட்டாததன் காரணமாக விமானி 10:45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தை மீண்டும் தரையிறக்க நடவடிக்கை எடுத்ததாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, குறித்த விமானத்தில் 301 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்துள்ளதோடு விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி, பயணிகளை வேறு விமானங்கள் மூலம் ஜப்பானில் உள்ள நரிட்டாவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளார்.