
கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையின் ஒழுக்காற்றுப் பிரிவில் கடமையாற்றும் காவலாளிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, மினுவாங்கொடை நீதிமன்ற நீதவான் குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,
மேலும், கடந்த மே மாதம் 12 ஆம் திகதி அதிகாலை மினுவாங்கொடை, வாகோவ ராஜசிங்கபுர பகுதியில் உள்ள சிறைச்சாலை அதிகாரியின் வீட்டிற்குள் சந்தேகநபர்கள் பலவந்தமாக நுழைந்து துப்பாக்கிகளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.