
நாட்டின் மீது அக்கறையுள்ள உண்மையான எதிர்க்கட்சி இருந்தால், உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்ற விவாதமோ, கருத்துக் கணிப்புகளோ தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இத்தருணத்தில் அது பற்றிய விரிவான பேச்சு வார்த்தை நடக்க வேண்டுமே தவிர, விவாதம் அல்ல என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ருவன்வெல்ல ராஜசிங்க பாடசாலை விளையாட்டரங்கில் நடைபெற்ற பாடசாலை வலைப்பந்தாட்ட போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இன்று (01) இதனை அறிவித்தார்.
இதனால் நாட்டிலுள்ள வங்கி முறையிலோ அல்லது EPF மற்றும் ETF நிதியிலோ எந்தவித பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தாது என உறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்க்கட்சிகள் சிலர் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பிரேரணையை நிச்சயமாக வெற்றிகொள்ளும் திறன் அரசாங்கத்திற்கு உண்டு என்பதை உறுதிப்படுத்திய அமைச்சர், வண்ணக் கண்ணாடி மூலம் பார்க்கும் யுகம் முடிவுக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.