
இந்த வருடம் மின்சார உபகரண ஏற்றுமதி மூலம் 650 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெறுவதே தொழில் முயற்சியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் இலக்காகும் என கைத்தொழில் அமைச்சின் ஆலோசனைக் குழுவின் தலைவர் தம்மிக்க சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கடந்த 2022ஆம் ஆண்டு மின்சார உபகரண ஏற்றுமதி மூலம் நாடு 422 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளதாகவும் 2025 ஆம் ஆண்டில் அதனை ஒரு பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே இலக்கு எனவும் தம்மிக்க சமரவிக்ரம மேலும் குறிப்பிட்டுள்ளார்.