
12.5 கிலோ கிராம் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை மூவாயிரம் ரூபாவிற்கும் கீழே குறைக்க எதிர்பார்த்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை (04) உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் கடந்த மாதம் 04 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபா குறைக்கப்பட்டு, .3,186 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பபடுகின்றது.
இது தவிர 05 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டு 1281 ரூபாவாகவும் 2.3 கிலோகிராம் என குறிப்பிடப்பட்ட சிறிய லிட்ரோ எரிவாயு ஒன்றின் விலையும் 83 ரூபாவால் குறைக்கப்பட்டு 598 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பபடுவது குறிப்பிடத்தக்க விடையமாகும்.