
சீகிரியா பழைய விமான நிலைய வீதி பகுதியில் உள்ள வீடொன்றின் முன் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, குறித்த வீட்டிற்கு முன்பாக உள்ள வேலி மரத்தின் கீழ் வெடிகுண்டு புதைக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை விசேட பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளதுடன் மாத்தளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு, தம்புள்ளை பொலிஸ் விசேட பணியகம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், குறித்த வேலி மரத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது, குறித்த கைக்குண்டு மற்றும் 2 மின்சார டெட்டனேட்டர்களை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், வெளிநாடு ஒன்றில் தயாரிக்கப்பட்ட SFG 87 ரக கைக்குண்டுகளே இந்த நாட்டில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆகவே, வீட்டை 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியதாக வீட்டின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதுடன் கைக்குண்டை புதைத்தவர்கள் மற்றும் இராணுவத்தில் இருந்து கொண்டு வந்தவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குருநாகல் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவின் அதிகாரிகள் வந்து குறித்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்துள்ளனர்.