
பொய்யான வாதங்களை முன்வைத்து மேலும் தோல்வியடைவதை விடுத்து, நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான முழு எதிர்க்கட்சியினரையும் அழைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, அமைச்சர் மகிந்த அமரவீரவின் 32வது அரசியல் வாழ்வின் நிறைவை முன்னிட்டு இன்று (03) முற்பகல் மாகம் ருஹுனு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தேவையென்றால் சபாநாயகருடன் கலந்துரையாடி அவர்களுக்கு பாராளுமன்றத்தில் அதிக பொறுப்புகளை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.