
சீனாவின் தேசிய விமான சேவையான ஏர் சைனா இலங்கையுடனான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
ஏர் சீனா எயார்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்ததாகவும் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டிற்க்கு வந்த விமானத்தில் 142 பயணிகளும் 09 ஊழியர்களும் வந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்படி, கொரோனா தொற்று நிலைமை காரணமாக, விமான நிறுவனம் சுமார் மூன்று ஆண்டுகளாக இலங்கைக்கான விமானங்களை தற்காலிகமாக நிறுத்தியமாய் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
மேலும், ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் குறித்த விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று சீனாவின் செங்டுவில் இருந்து இரவு 08.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய உள்ளதோடு இரவு 10.15 மணிக்கு குறித்த விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் கட்டுநாயக்காவில் இருந்து சீனாவின் செங்டுவுக்குப் புறப்படுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.