
மின்சாரா சபைக்கு தற்போதுள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து டாடா பவர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி பிரவீர் சின்ஹாவுடன் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கலந்துரையாடியுள்ளார்.
இன்று (05) காலை நடைபெற்ற குறித்தக் கூட்டத்தில் மற்றுமொரு அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய சீர்திருத்த செயல்முறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள் மற்றும் பிராந்திய எரிசக்தி ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.