
உள்ளுராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கான தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைபுக்கு எதிராக இன்றைய தினம் நீதிமன்றில் உண்மைகளை தெரிவிக்கவுள்ளதாக பஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த சட்டமூலம் அரசியலமைப்பை தெளிவாக மீறுவதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறித்த்ஸ் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது தவறான முன்னுதாரணமாக அமையும் எனவும் பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.