
அஸ்வசும சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் குறித்த திட்டத்திற்கான பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக சுமார் 9 லட்சம் முறையீடுகளும், 12,000 ஆட்சேபனைகளும் பெறப்பட்டுள்ளன.
இதன்படி, அஸ்வசும சமூக நலன்புரி உதவித் திட்டத்தின் பயனாளிகளைத் தெரிவு செய்யும் போது பொருத்தமான சிலர் தெரிவு செய்யப்படவில்லை எனக் கூறி கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதேவேளை, உரிய மேன்முறையீட்டு மனுக்களை பரிசீலிக்க மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென அகில இலங்கை சுபீட்ச அபிவிருத்தி விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி உத்தியோகத்தர்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
அநீதிக்கு உள்ளான மக்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார மேலும் தெரிவித்துள்ளார்.