
பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக இலங்கையை உலகிற்கு திறந்து வைப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்ட சீர்திருத்தங்கள் உடனடியாகக் கொண்டுவரப்படும் என நேற்று (13) இடம்பெற்ற இந்தியா வர்த்தக சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்தோடு, இலங்கையை அதிக போட்டித்தன்மை கொண்ட பொருளாதார முறைக்கு கொண்டு வருவதே தமது நம்பிக்கை எனவும் பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.