
கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (14) உச்ச நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
இதன்படி, வழக்கு தொடர்பான அனைத்து தொழில்நுட்ப விஷயங்களும் முடிவடைந்துள்ளதால், வரும் 24 ஆம் திகதி மீண்டும் மனுவை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, கடந்த மாதம் 27ஆம் திகதி உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, புதிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களும் இன்று (14) உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.