
குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போடாததால் சமூகத்தில் பல்வேறு நோய்கள் பரவி வருவதாக ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
எனவே, தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், சரியான நேரத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குமாறும் அவ்வாறு செய்யாவிட்டால் சமுதாயமே ஆபத்தை சந்திக்க நேரிடும் எனவும் பெற்றோர்களுக்கு வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.
ஆகவே, பெரியவர்கள் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கவனக்குறைவால் குழந்தைகள் பெரும்பாலும் விபத்துக்களை எதிர்கொள்வதாகவும் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.