
பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பல சொத்துக்களை திருடிய சம்பவங்களில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, கொச்சிக்கடை, மூணமல்தெனிய பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களால் திருடப்பட்ட 17 மடிக்கணினிகள், 07 கையடக்க தொலைபேசிகள், 02 டேப் கணனிகள், 02 DVD இயந்திரங்கள் உட்பட பல சொத்துக்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதோடு கொச்சிக்கடை, நீர்கொழும்பு மற்றும் குளியாபிட்டிய பிரதேசங்களில் அமைந்துள்ள பல மின் உபகரண விற்பனை நிலையங்களில் சொத்துக்களை திருடிய சம்பவம் தொடர்பில் முன்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பல வீடுகளை உடைத்தல் மற்றும் சொத்துக்களை திருடுதல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் தெஹிவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பறீஹிவ கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 16 வழக்குகளுக்கு சந்தேக நபருக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு மற்றும் கல்கிசை நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.