
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய உரக் கொள்கையினால் 10 வருடங்களின் பின்னர் ஐந் இலட்சத்து பன்னிரண்டாயிரம் ஹெக்டேயர் நெற்செய்கை யாழ் பருவத்தில் பயிரிடப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு விவசாயத்தை நவீனமயமாக்கும் ஜனாதிபதியின் திட்டத்தின்படி, 2025ம் ஆண்டுக்குள் நாட்டின் விவசாய உற்பத்தியில் 80 சதவீதத்தை எட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு, 6 பருவங்களில் நெல் விளைச்சலை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் 60 மெற்றிக் தொன் சோள விளைச்சலைப் பெற எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், விவசாயத்தில் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட மரக்கறிகள் மற்றும் பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் எனவும் இதன் மூலம் விவசாய பயிர்களின் இறக்குமதியை மட்டுப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.