
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி, ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் உச்ச நீதிமன்றம் முன்வைத்துள்ள திருத்தங்களை குழு அமர்வின் போது பரிசீலிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நாளை நாடாளுமன்றக் குழுவின் போது நடைபெறவுள்ளதோடு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்துக்கான வரைவு அதன் அரசியலமைப்புத் தன்மையை ஆராய்வதற்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.